வேலூர் மாவட்டம் குடியாத்தம் போலீசார் கடந்த மாதம் போதை மாத்திரை பயன்படுத்தியதாக 13 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த பிரதாப் சௌத்ரி(36) என்பவர் போதை மாத்திரைகளை சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று அவரை நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் இருந்து 11,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.