அப்போது அவர் குறிப்பிட்ட உயரத்தில் தரமாக சாலையை அமைக்கும்படி மாநகராட்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். பின்னர் அவர் நைனி யப்பன் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை பார்வையிட்டார். மேலும் அந்த தெருவில் பயன்பாட்டில் இல்லாத சின் டெக்ஸ் குடிநீர் தொட்டியை சரி செய்து, பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார்.
அப்போது அப்பகுதி மக்கள், குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்டு குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து தரும்படி கோரிக்கை வைத்தனர். அவற்றை விரைவில் சீரமைத்து கொடுப்பதாக மேயர் சுஜாதா தெரிவித்தார். ஆய்வின்போது கவுன்சிலர் மம்தாகுமார், இந்துசமய அறங்காவலர்குழு உறுப்பினர் சுகுமார், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.