இந்நிலையில் காட்பாடி கூட்ரோடு பகுதியில் திருவலம் காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி 4ஆம் தேதி வாகன தணிகையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தபோது, அங்கே சந்தேகப்படும்படியாக இருவர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் காவல்துறைக்கு சந்தேகம் ஏழுந்தது.
தொடர்ந்து விசாரணை செய்ததில் கே. ஜி. எஃப் தளபதி (எ)பேஷன் கே. ஜி. எஃப் முகமது சேர் என்பதும், கடந்த ஆண்டு காட்பாடி கண்டிப்பேடு பகுதியில் வீட்டில் நகை திருடியதும் கடந்த 02.03.2024ஆம் தேதி முதியவரிடம் ரூபாய் ஒரு லட்சத்தை திருடியதும் ஒப்புக்கொண்டனர். உடனே அவர்களிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகைகள், ரூ. 70,000 ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.