காட்பாடியில் போக்குவரத்து மாற்றம்

பழைய காட்பாடியில் 76வது ஆண்டு மாடு விடும் விழா வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சித்தூர் பேருந்து நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படும். கனரக வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் ஓடை பிள்ளையார் கோயில் சந்திப்பில் திரும்பி, வி.ஜி. ராவ் நகர் வழியாக பிரம்மபுரம் செல்லலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி