திருப்பத்தூர்: தேனீக்கள் கொட்டியதில் தனியார் நிறுவன ஊழியர் மரணம்

திருப்பத்தூர் அருகே மாந்தோப்பில் தேனீக்கள் கொட்டியதில் சிறுவன் சித்தார்த் குகன் (9) உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். வினோத்குமார் (42), அவரது மனைவி சண்முகபிரியா (39) மற்றும் மகன் சித்தார்த் குகன் ஆகியோர் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தபோது, குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு தேனீக்கள் தாக்கியதில் மூவரும் மயங்கி விழுந்தனர். மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதில், வினோத்குமார் உயிரிழந்தார். சண்முகபிரியா மற்றும் சித்தார்த் குகன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி