வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்பாடி ஊராட்சி எம். ஜி. ஆர். நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொன்னை-திருவலம் சாலையின் குறுக்கே காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மேல்பாடி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.