வேலூர் அருகே தூக்குப்போட்டு உடற்கல்வி ஆசிரியர் தற்கொலை

வேலூரை அடுத்த பென்னாத்தூர் கிராமம், ஆரணி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொற்செயன் என்கிற ஹரி (வயது 30). ஜமுனாமரத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கீதா (27). தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக பொற்செயனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி