எனவே தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த பாதையை மீட்கும் வரை இரந்த மூதாட்டி காமாட்சியம்மாளின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம். அதை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் வைத்து போராடுவோம் என்று பிணத்துடன் கிராம மக்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் பிணத்தை வழியிலேயே மடக்கி ஆலங்கனேரி அருகே தடுத்து விட்டனர். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறினர். அதே நேரத்தில் நேற்று குறித்த நேரத்தில் பிரச்சினை தீரும் வரை மூதாட்டியின் உடலை புதைக்க மாட்டோம் என்று பிணத்துடன் போராடினர்.
பிரச்சனையை தீர்க்கப்படா விட்டால் பிணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வைத்து போராடுவது என திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இதனை அடுத்து பதற்றம் ஏற்படாமல் இருக்க தர்மாவரம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் நீரோடையில் குறுக்கே பாலமாக தற்காலிகமாக மண்மேடு அமைக்கப்பட்டது. அதன் வழியே மூதாட்டி இறுதி ஊர்வலம் சென்றது.