வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டை பெற அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் பிப்ரவரி 24 மற்றும் 26 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த முகாம் மூலம் தேவாலய ஊழியர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.