வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனை கட்டப்பட்ட நாள் முதல் இதுவரை மூன்று முறை நெபுலைசர் கருவிகள் திருடுபோயுள்ளன. இன்று அதிகாலை நோயாளிகள் பயன்படுத்தும் நெபுலைசரை ஆண், பெண் என இருவரும் திருடிச் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்குள் நெபுலைசர் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.