வேலூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கனிம வளத்துறை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி 'எம்-சாண்ட்' மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி