வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பாகாயம் போலீசாருக்கு ஞாயிறு அன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்திரன் (58) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 75 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.