வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா விருதம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றிய செந்தில்குமார் (56), தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உரிமத்தை புதுப்பிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.