அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், கலைஞர் ஆட்சியில் 100 கோடி ரூபாயில் மதிப்பிட்டில் கட்டப்பட்ட மோர்தானா அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இன்னும் பத்து இருபது நாட்களில் சுற்றுலாத்துறை அமைச்சரை அழைத்து வந்து மோர்தானா அணையை சுற்றுலா தளமாக அமைக்கப்படும்.
அண்ணா நெடுஞ்செழியன் பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் வகித்த பொதுச் செயலாளர் பதவிக்கு நான் இருக்க காரணம். நான் பெரிய செல்வந்தர் அல்ல. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். சாதாரண காங்குப்பம் துரைமுருகன் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆக காரணம் கட்சியில் ஆடாமல் அசையாமல் இருந்ததால்தான். மேலும் தலைவருக்கு அடிபணிந்து நடந்தேன் தியாகத்தையும் உழைப்பையும் கொடுத்தேன். அதனால் எனக்கு அந்த இடம் தரப்பட்டுள்ளது, "என்றார்.