காட்பாடி: மாணவியை தாக்கிய விடுதி உரிமையாளர் கைது

காட்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில்ப டித்து வந்தார். இவர் காட்பாடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி அறையை காலி செய்தார். அதற்கு முகமது சுகேந்தர் (29) என்பவர் உதவிக்கு வந்துள்ளார்.

அப்போது அந்த விடுதியின் உரிமையாளரான, அப்துல்லாபுரத்தைச் சேர்ந்த மேகநாதன் (62) அறையை சுத்தம் செய்வதற்கான கட்டணம் என கூடுதலாக ரூ. 1, 000 கேட்டுள்ளார். அதற்கு எதற்கு கூடுதலாக கட்டணம் கேட்கிறீர்கள் என முகமது சுகேந்தர் கேட்டுள்ளார்.

இதில் இரு தரப்பினருக்கும் இடையை வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறி மாணவி மற்றும் முகமது சுகேந்தரை ஆபாசமாக திட்டி மேகநாதன் தாக்கியாத கூறப்படுகிறது. இது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்தார்.

தொடர்புடைய செய்தி