நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு சாகசங்களை செய்து அசத்தினர். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் கோபி நாயனார் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "சுயமரியாதையை நமக்கு உருவாக்கித் தருவது நம்மிடம் உள்ள தன்னம்பிக்கை தான். சண்டையிடுவதற்கும் சமாதானத்திற்கும் மனம் தான் காரணமாக உள்ளது. ஆகையால் மனதை எப்போதும் தைரியத்தோடு வைத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தில் உங்களை தனித்துவத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். தனித்துவம் தான் நமக்கு எப்போதும் உதவும். இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பெண் படிப்பில் சிறந்தவராக இருப்பதை விட சிறந்த சண்டை பயிற்சியாளராக இருப்பது தான் ரொம்ப முக்கியம், " என்று பேசினார்.