வேலூரில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு தீவிரம்!

சென்னையில் காகங்கள் அதிக அளவில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பறவைக் காய்ச்சல் (ஏஎச்5 என் இன் புளூயன்சா) உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே வேகமாகப் பரவும் நோயாகும். காட்டுப் பறவைகள், வளர்ப்பு கோழிகள் மற்றும் பிற விலங்குகளையும் இது பாதிக்கக்கூடும். மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ள இந்த நோயால் இதுவரை பாதிப்பு இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி