பேரணாம்பட்டு அருகே வாலிபர் மீது தாக்குதல்: 2 பேர் கைது

பேரணாம்பட்டு தாலுகா சாலப்பேட்டையை சேர்ந்தவர் சாமுவேல் (32). இவருக்கு அறிமுகமான ஒருவர் தனது மகளுக்கு தனியார் கல்லூரியில் மருத்துவ சீட்டு வாங்கித் தருமாறு சாமுவேலிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளார். 

இதுகுறித்து அந்த நபர் வேலூர் விருப்பாட்சிபுரம் மற்றும் சாய்நாதபுரத்தை சேர்ந்த ஜான்டேனியல் (29), தீபன் (29) உள்ளிட்ட சிலரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சாமுவேலை காரில் அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சாமுவேல் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் ஜான்டேனியல் மற்றும் தீபன் வசந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி