கே. வி. குப்பம் பகுதியில் கீதா தனது மருமகள் பூர்ணிமாவுடன் பாலாற்றின் கரையோரம் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. மாட்டை மீட்க ஆற்றில் இறங்கிய கீதா, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த கே. வி. குப்பம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.