காட்பாடியில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் உடல் சிதறி பலி

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட திருவலம் - சேவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி