வேலூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் குட்கா பொருட்கள் விற்ற 35 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும், கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 35 கடைகளில் இருந்து மொத்தம் 119 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட கடைகள் 15 நாட்கள் முதல் 90 நாட்களுக்குப் பின்னரே திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.