கர்நாடகாவில் இருந்து காக்கிநாடாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காட்பாடிக்கு வந்தது. அதில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சீட்டுக்கு அடியில் கேட்பாரற்று இருந்த 8 மூட்டைகளில் 250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தியது யார்? எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? என விசாரித்து வருகின்றனர்.