வேலூர் மாவட்டம் வல்லண்டராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு (நவ. 23) முன்னால் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில், ஜெயந்தி (54) என்ற பெண் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகொண்டா போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.