திருப்பத்தூர் அருகே வரதட்சனை கொடுமையால் பெண் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூரைச் சேர்ந்த தீபிகா, வரதட்சணை கொடுமையால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வரதட்சணை கொடுமை உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூன்று பேர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி