திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் நகை வாங்குவது போல் நகைகளை திருடிச் சென்றவர் ஆம்பூரை அடுத்த வீராங்குப்பம் பகுதியை சார்ந்த ரமேஷ் என்பவருடைய மனைவி கவிதா (வயது 40) என்ற பெண்.
இவரை போலீசார் கைது செய்து நாட்றம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் இருந்த 79 கிராம் தங்க நகையை மீட்டுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.