வழிப்பறிக் கொள்ளையர்களால் மக்கள் அச்சம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் 4 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர், வீதியில் நடந்து சென்ற பொதுமக்களை அச்சுறுத்தியும் அவ்வழியாக சென்று கொண்டு இருந்த கோகுல் என்ற இளைஞரை பாட்டலால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க சங்கிலியும் பறித்தனர்.

பின்னர் சற்று தூரம் சென்று இரண்டு பேரை தாக்கி அவரிடம் இருந்த 2 செல் போன்களை பறித்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் குறித்து புத்துக்கோயில் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் உதயா ஆகியோர் அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் பேரில் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் வழிப்பறி கொள்ளையர்கள் 9 பேரை தேடி வருகின்றனர்.

புத்துக்கோயில் பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி