இந்நிலையில் குழந்தை தேவதர்ஷினி பூங்கா மற்றும் அங்கன்வாடி கட்டிடம் இரண்டும் ஒரே இடத்தில் இருந்து வருவதால் அங்கன்வாடி கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பூங்காவில் உள்ள ஊஞ்சலில் ஆடியதாக தெரிகிறது அப்போது அங்கன்வாடி ஆசிரியை குழந்தை தேவதர்ஷினியை வலுக்கட்டாயமாக உள்ளே வர அழைத்தபோது வர மறுத்த குழந்தையை அளவுகோல் வைத்து அடித்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக காயமடைந்த குழந்தையின் பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அடித்த அங்கன்வாடி ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜோலார்பேட்டை காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே காவல்துறை நடவடிக்கை சம்பந்தமாக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அங்கன்வாடி குழந்தை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.