பின்பு ஒரு காலகட்டத்தில் மணியும் இறந்துவிட்ட சூழ்நிலையில் மணியின் மகன் வாசு என்பவர் காதல் திருமணம் செய்து கந்திலி அடுத்த மாணவள்ளி பகுதியில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மணியின் ஐந்தாவது மகன் கதிர்வேல் என்பவர் உடன் பிறந்தவர்கள் யாருக்கும் சொத்தை பகிர்ந்து கொடுக்காமல் இவரது அம்மா சின்ன கண்ணம்மாள் அறியாமையை பயன்படுத்தி தான் பத்திரம் செய்து கொண்டு வாரிசு சான்று இல்லாமல் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு ஏக்கர் நிலத்தை விற்று மோசடி செய்துள்ளதை கண்டித்து உயிரோடு இருக்கும் எங்களுக்கும் உரிமை இருக்கிறது
எனவே இந்த நிலத்தை முறையாக பத்திர பதிவு செய்யாத சார் பதிவாளர் கத்தாரி கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிணம் போல் வேடம் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.