வேலூர் மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் பிப்ரவரி 25 அன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தனது பிப்ரவரி 23 ஆம் தேதி அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார். இந்த முகாம் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி