ஜோலார்பேட்டை அருகே ஆட்டோக்கு தீ வைத்த மர்ம நபர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியில் அண்ணாமலை என்பவர் தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் கொளுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோலார்பேட்டை காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி