அப்போது அடுத்தடுத்து வைக்கப்பட்ட அதிக புகை வரக்கூடிய பட்டாசு வெடிக்கப்பட்டதின் காரணமாக புகையின் தாக்கத்தால் தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் வெளியேறி சவ ஊர்வலத்தில் பங்குபெற்ற சுமார் 20க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்ததின் காரணமாக அனைவரும் அங்கிருந்து அலறி ஓடிவிட்டனர்.
பின்பு அனைவரும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் பழனி மற்றும் பரமசிவம் என்கிற இரண்டு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மற்றவர்கள் அனைவரும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.