பொய்கை புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்கை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் இன்று (பிப்ரவரி. 21) திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரபாண்டியன், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி