தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநில ஜீஸ் கம்பெனிகளுக்கு செல்லும் மாங்காய்களை வாங்க மறுத்து திருப்பி அனுப்புவதை கண்டித்தும், ஆந்திர ஜீஸ் கம்பெனிகள் தமிழக விவசாயிகளின் மாங்காய்களை பெற அனுமதி பெற்றுத்தரக்கோரி பரதராமி பகுதியில் மாங்காய்களை கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை காவல் துறை தடுத்து நிறுத்தியதால் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரதராமி காவல் நிலையம் அருகே குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.