சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார் தீபிகா (23). திருமணமான ஒரு வாரத்திலேயே வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் ஆகியோரால் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தாய் வீட்டில் இருந்த தீபிகா, மனமுடைந்து 3 நாட்களுக்கு முன்பு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபிகாவின் கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம், மாமியார் சித்ரா ஆகியோரைக் கைது செய்தனர்.