வேலூர் புத்துகோயிலில் அர்ஜுன் சம்பத் சிறப்பு சுவாமி தரிசனம்

பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த புத்துமாரியம்மன் கோவிலில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு சுவாமி தரிசனம். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வாணியம்பாடி அருகே சென்னை பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கோவிலில் இன்று சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார். உடன் திருப்பத்தூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி