வேலூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில், மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் குடியாத்தம் எம்எல்ஏ அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் முக்கிய அரசியல் மற்றும் கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.