இதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் நாட்றம்பள்ளி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் ஓட்டுநரை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தகவல் தெரிவித்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து உயிரிழந்த ஓட்டுநரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.