வேலூர் மாவட்டம் கீழ்வடுகன்குட்டையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சதீஷ்குமார் (35) மற்றும் அவரது மாமனார் கோபி (62) ஆகியோர் நேற்று மாலை பைக்கில் லத்தேரிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பைக் நிலைதடுமாறி புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, சதீஷ்குமார் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.