இதனையடுத்து யூடுப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திமுகவுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக கூறி குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமகவினர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் மத்திய அமைச்சர் என். டி. சண்முகம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ இளவழகன் உள்ளிட்ட பாமகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் குடியாத்தம் குமரன் வீட்டிற்கு 24 மணி நேரம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.