திருப்பத்தூர்: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறி பாய்ந்து ஓடியது. இந்த நிலையில் சின்ன மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சின்னமுனுசாமி (55) என்பவர் எருது விடும் திருவிழாவை பார்ப்பதற்காக வந்துள்ளார். 

அப்போது மந்தையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மந்தையில் சீறிப்பாய்ந்து வந்த மாடு முதியவரை முட்டியதில் தூக்கி வீசப்பட்டு வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதியவரை மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி