அப்போது வெளியே வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி கட்டையால் சாராமரியாக அடித்துள்ளனர். இதனால் கனகா கத்திக் கூச்சலிட்டவே கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த அவருடைய மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
எனவே ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி நான்கு சவரன் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், மாமியார் உடனான தகராறு காரணமாக மருமகளே ஆள் வைத்து தாக்குதலில் ஈடுபட்டது. விசாரணையில் அம்பலமானாது. மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால், பழிவாங்க மாமன் மகன் மூலம் இவ்வாறு செய்ததாக மருமகள் வசந்தி வாக்குமூலம் அளித்துள்ளார். நகையை பறிமுதல் செய்த போலீசார், வசந்தி, மைக்கேல் ராஜ் இருவரையும் கைது செய்தனர்.