திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற புத்துக் கோயில் அம்மன் ஆலயத்தில் அரிவாளுடன் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியத்துடன். அருவாவை வைத்துக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அங்குள்ள மணி, சிலை உள்ளிட்டவைகளில் தாக்குதல் நடத்தினார். பின்னர் ஆபாச வார்த்தைகளால் அங்குள்ளவர்களை திட்டினார். அவரிடம் இருந்து பொதுமக்கள் கத்தியை பிடுங்கி அவரை சரமாரியாக அடித்தனர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.