ஜோலார்பேட்டையில் 9 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, உத்தரவின் பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் நேற்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய ஜோலார்பேட்டை பகுதியில் வெங்கடேசன் (வயது 66) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 9 கிலோ போதை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஜோலார்பேட்டை காவல் துறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி