இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கத்தில் உள்ள ஜன்னலை கடப்பாரை மற்றும் கோடரியால் வெட்டி உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 46 சவரன் தங்க நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டிற்கு வந்த முத்து பின்பக்க ஜன்னல் உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி கோவிந்தராசு மற்றும் நாட்றம்பள்ளி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?