வாலாஜா: போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்

வாலாஜா நகரில் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. முதலாவது தேசிய நெடுஞ்சாலை வாலாஜா அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து தொடங்கி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி வரை உள்ளது. மற்றொரு தேசிய நெடுஞ்சாலை வாலாஜா பேருந்து நிலையம் முதல் பத்திரப்பதிவு அலுவலகம் வரை உள்ளது. இந்த இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் பல வருடங்களாக அகலப்படுத்தாத நிலையில், ஆக்கிரமிப்புக்கு வழி செய்யும் வகையில் உள்ளன. நடைபாதைகள் முழுவதும் அதிக அளவில் மினி ஓட்டல்கள் அதிகரித்து விட்டன. இதனால் இந்த வழியே வரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக போக்கு வரத்து பாதிக்கும் வகைகளில் நிறுத்தப்படுகின்றன. ஆகவே உடனடியாக போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி