இந்த நிலையில் போலீசார் பனப்பாக்கத்தில் இருந்து கீழ்வீதி செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே நடந்துவந்த துறையூர் காளிகாபுரத்தை சார்ந்த 3 சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் சுமார் 13 கிலோ எடையுடைய மின்கம்பி இருந்தது. மேலும் விசாரணையில் அது ஜெய்சங்கரில் நிலத்தில் திருடியது தெரிய வந்தது. இதைய டுத்து 3 சிறுவர்களையும் போலீசார் சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.