குடியாத்தம், அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், மாணவனை குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு, வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். போலீசார் மாணவரை எச்சரித்து அனுப்பினர்.