ராணிப்பேட்டை: வீட்டில் பிரசவம்..தாய், சேய் மரணம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஜோதி என்ற பெண் தனது 4வது பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்த்த நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் தாயும், குழந்தையும் மயக்கமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வீட்டிலேயே சுயமாக பிரசவம் பார்த்துக் கொண்ட பெண்ணும், பிறந்த பச்சிளம் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி