வேலூர்: சர்வீஸ் சாலையை சீரமைத்த போலீஸ்

சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஆற்காட்டை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக செல்கிறது. தற்போது பெய்த மழையால் சர்வீஸ் சாலையில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணிப்பேட்டை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சர்வீஸ் சாலையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தி பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி