ஆற்காடு அருகே நள்ளிரவில் மக்கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த லாடவரம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை எடை போடும் இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாகவும், குறைந்த அளவே நெல் காட்டப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி